Home Mahe MAHE MLA VALSRAJ PAINTING SHOW

MAHE MLA VALSRAJ PAINTING SHOW

873
0

மாஹே தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. இ.வல்ரரஜ் வரைந்த ஓவியங்களின் கண்காட்சி புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள ஆர்ட் கேலரியில் புதன்கிழமை தொடங்குகிறது.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
பல ஆண்டுகளாக நான் ஓவியம் வரைவதில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறேன்.
முதன்முறையாக கடந்த 1973-ம் ஆண்டு ஜெர்மனியில் நடந்த இளைஞர் கலைவிழாவில் பங்கேற்று ஓவியங்களை பார்வைக்கு வைத்தேன்.
குறிப்பாக இயற்கைக்கு முக்கியத்துவம் தந்து பல்வேறு ஓவியங்களை வரைந்துள்ளேன்.Paininting
ஆயில் பெயிண்டிங் ஓவியங்களில் ஈடுபாடு அதிகம்.
எனது ஓவியங்களின் கண்காட்சி ஏற்கெனவே தில்லி லலித்கலா அகாதெமி, குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்துள்ளது. புதுச்சேரியிலும் ஓவியக்கண்காட்சியை நடத்த திட்டமிட்டு தற்போது தான் கை கூடியுள்ளது.
முதல்வர் ரங்கசாமி ஓவியக் கண்காட்சியை புதன்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்கி வைக்கிறார். வரும் 28-ம் தேதி வரை ஓவியக்கண்காட்சி நடைபெறும். நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடலாம்.painting 1
28-ம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி, எதிர்க்கட்சித் தலைவர் வைத்திலிங்கம் கலந்து கொள்கின்றனர்.
மாஹேயில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.68 லட்சம் செலவில் நூலகம் கட்டப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கலைக்கூடமும் அமைக்க திட்டமிட்டுள்ளேன்.
தேர்தலில் போட்டி
கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து மாஹே தொகுதியில் வெற்றி பெற்று வரும் வல்சராஜ் வரும் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்றார்.
மேலும் காரைக்கால் துறைமுகம், புதுச்சேரியில் பல்வேறு மருத்துவக் கல்லூரிகள்,
ராஜிவ் காந்தி அரசு மகளிர் மருத்துவமனை உள்ளிட்டவை நான் கொண்டு வந்த திட்டங்களில் குறிப்பிடத்தக்கவை என்றார் வல்ரசராஜ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − seventeen =