Home Mahe MAHE MAYYAZHI MAHOTSAVAM 2015

MAHE MAYYAZHI MAHOTSAVAM 2015

1557
0

புதுச்சேரி பிராந்தியங்களில் ஒன்றான மாஹே கலைத்திருவிழா குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் மாஹேயில் நடைபெறறது.
கேரளத்தை ஒட்டிய மாஹேயில் புதுச்சேரி அரசு சார்பில் ஆண்டுதோறும் மாஹே கலைத்திருவிழா நடைபெறும். இதில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், திரைப்பட நடிகர்கள் பங்கேற்கும் இசை விழாக்கள், பல்வேறு நாடகங்கள், நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
நடப்பாண்டு வரும் 29-ம் தேதி முதல் டிசம்பர் 1-ம் தேதி வரை மாஹே திருவிழா நடக்கிறது.
துணைநிலை ஆளுநர் ஏ.கே.சிங் விழாவைத் தொடங்கி வைக்கிறார். முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கேரள மாநில அமைச்சர்களும் கலந்து
கொள்கின்றனர்.

இந்நிலையில் மாஹே திருவிழா குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இ.வல்ரசராஜ் எம்.எல்.ஏ. பேரணியைத் தொடங்கி வைத்தார்.
பிராந்திய அதிகாரி தினேஷ் மங்கலாட் கொடியேற்றி வைத்தார்.
திரைப்பட நடிகர் விஜயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
மாஹே நகரின் முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு ஊர்வலம் சென்றது.
இதில் மாணவ, மாணவியர், பொதுமக்கள் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 + 6 =