பிரான்ஸ் நாட்டு தூதுக்குழுவினர் முதல்வர் ரங்கசாமியோடு ஆலோசனை..

  788
  0
  SHARE

  புதுச்சேரியில் தொழில்துறை உள்பட பல்வேறு துறைகளில் முதலீடு மேற்கொள்வது குறித்து பிரான்ஸ் நாட்டு தூதுக்குழுவினர் முதல்வர் ரங்கசாமியோடு ஆலோசனை மேற்கொண்டனர்.

  பிரான்ஸ் நாட்டின் ஆளுகையின் கீழ் புதுச்சேரி இருந்த நிலையில் அந்நாட்டு அரசு புதுச்சேரிக்கு பல்வேறு வகைகளில் உதவி வருகிறது. இந்நிலையில் இந்திய நாட்டுக்கான பிரான்ஸ் தூதர் பிராங்கோயிஸ் ரிச்சியர் தலைமையிலான தூதுக்குழுவினர் புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமியை  சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

  1

  அப்போது புதுச்சேரியில் முதலீடு செய்வதற்கான சூழல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. துணை தூதர் பிலிப் ஜானவியர் காமியாமா, தூதரக அதிகாரிகள்  பானி  ஹர்வ், இல்கியா மான், பிரெஞ்ச் வளர்ச்சி முகமை இயக்குநர்  நிக்கோலஸ்  பார்னேஜ், பிரான்ஸ் தொழிலதிபர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

  NO COMMENTS

  LEAVE A REPLY

  fifteen + twenty =