ஜிப்மர் இயக்குநராக பரிஜா நியமனம்..

  833
  0
  SHARE

  புதுச்சேரி ஜிப்மர் இயக்குநராக பரிஜா நியமிக்கப்பட்டார். இந்த உத்தரவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

  புதுச்சேரி ஜிப்மர் இயக்குநராக இருந்த டாக்டர் .ரவிக்குமார் கடந்த பிப்ரவரி மாதம் ஓய்வு பெற்றார். பின்னர் இயக்குநர் பொறுப்பில் டாக்டர் பரிஜா நியமிக்கப்பட்டு கடந்த 6 மாத்ங்களாக செயல்பட்டு வந்தார்.
  தற்போது டாக்டர் பரிஜாவை முழு நேர இயக்குநராக நியமித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

  மருத்துவ நுண்ணுரியியல் துறையில் டாக்டர் பரிஜா 30 ஆண்டுகள் பணியாற்றி வருகிறார். இதுவரை 10 மருத்துவ நூல்களை எழுதியுள்ளார்.
  சர்வதேச, தேசிய மருத்துவ கருத்தரங்குகளில், இதழ்களில் 267 ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். இவர் பொறுப்பு ஏற்கும் நாளில் இருந்து 5 ஆண்டுகள் அல்லது, 65 வயது நிறைவடையும் வரையிலோ, இதர  உத்தரவு பிறப்பிக்கும் வரையிலோ  அவர் இயக்குநர் பொறுப்பில் தொடருவார்  என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  NO COMMENTS

  LEAVE A REPLY

  18 − ten =