கண்தான விழிப்புணர்வு பேரணி…

  768
  0
  SHARE

  புதுச்சேரியில் கண்தான விழிப்புணர்வு குறித்து நடைபெற்ற பேரணியில் பள்ளி-கல்லூரி மாணவர்கள் 500 பேர் பங்கேற்றனர்.

       கண்தான தினத்தை முன்னிட்டு பள்ளி-கல்லூரி மாணவர்கள், தனியார் கண்மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள என 500 பேர் கலந்து கொண்ட கண் தான விழிப்புணர்வு பேரணி புதுச்சேரியில் நடைபெற்றது. காமராஜர் சிலை அருகே திரண்டு இருந்த பேரணியை, அமைச்சர் ராஜவேலு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

       பின்பு கண்தான விழிப்புணர்வு குறித்த பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்தியபடி பேரணியாக புறப்பட்டு காந்திவீதி, நேருவீதி, மிஷன்வீதி, ரெங்கபிள்ளை வீதி என நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று கடற்கரை காந்திதிடல் வந்தவுடன் முடிவடைந்தது.

       லட்சகணக்கில் கண் தேவைபடுவதால் கண்தானம் கொடுப்பதை ஒவ்வொரு குடும்பத்தினர் வழக்கமாக்கி கொள்ள வேண்டும் என்று பேரணியில் பங்கேற்ற மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

  NO COMMENTS

  LEAVE A REPLY

  eighteen − 12 =