Voluntariat…. Belgian woman in Puducherry gets Padma Shri

    419
    0
    SHARE

    பத்ம ஸ்ரீ விருது பெற்ற ஒலந்தரியா நிறுவனர் புதுச்சேரியில் தனது தொண்டு நிறுவன மக்களோடு விருதினை பிரித்து பார்த்து மகிழ்ந்தார்.

          உப்பளம்  நேத்தாஜி  நகரில் ஓலந்தரியா சமூகத் தொண்டு நிறுவனத்தை பெல்ஜியத்தை சேர்ந்த சமூக சேவகி மத லேன் தெப்ளிக் கடந்த  1962-ம் ஆண்டு துவக்கினார். இந்த நிறுவனம் ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவிகளை வழங்கி வருகிறது. தெருவோர சிறுவர் இல்லம், முதியோர் இல்லம், தொழுநோயாளிகள் மறுவாழ்வு இல்லம் போன்றவற்றையும் நடத்தி வருகிறது.

          பெல்ஜியம் நாட்டை சேர்ந்த இவர் கடந்த 58 ஆண்டுகளாக புதுச்சேரியில் தங்கி இருந்து ஏழை, எளியோருக்கு சேவை செய்து வருகிறார். இவரது சேவையைப் பாராட்டி பிரெஞ்ச் அரசாங்கம் ஏற்கனவே செவாலியே விருதை வழங்கியது. தற்போது மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதுக்கும் அவர் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இதனை பாராட்டும் வகையில் இவருக்கு பாராட்டு விழா உப்பளம் ஓலந்தரியா சமூகத் தொண்டு நிறுவனத்தில் நடைபெற்றது.

          இந்த விருதினை ஜனாதிபதியிடம் பெற்ற மத லேன் தெப்ளிக் பாராட்டு விழாவில் தொண்டு நிறுவன மக்களோடு பிரித்து பார்த்து மகிழ்ந்தார்.

          பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

          இளம் வயதில் ஓராண்டு பயணமாக பெல்ஜியத்தில் சமூக சேவை செய்வதற்காக புதுச்சேரி வந்தேன் என்றும், இங்கு தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை ஆற்றுவதுடன், அவர்களது குழந்தைகளின் கல்விக்கு உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

    5 குழந்தைகளுடன் துவங்கிய தனது தொண்டு நிறுவனம் தற்போது ஆயிரம் பேரை தாண்டியுள்ளது. 58 ஆண்டுகளாக புதுச்சேரியில் தொண்டாற்றி வருகிறேன் என்றும் பெருமித்த்துடன் அவர் கூறினார்.

    NO COMMENTS

    LEAVE A REPLY

    6 + three =