Home Crime BOMB PLAST IN POLICE STATION

BOMB PLAST IN POLICE STATION

974
0

 காவல் நிலையத்தில் நாட்டுவெடிகுண்டு வீச்சு

புதுச்சேரி முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் வியாழக்கிழமை இரவு மர்ம நபர்கள் நாட்டுவெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
முதலியார்பேட்டை காவல் நிலையம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. கடலூர் சாலையில் உள்ள காவல் நிலைய வளாகத்தில் உள்ள நுழைவு வாயில் அருகே வியாழக்கிழமை இரவு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.
மோட்டார் பைக்கில் வந்த மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசி விட்டு தப்பி விட்டனர். அவர்களை போலீஸார் விரட்டிச் சென்றபோதும், அவர்களை பிடிக்க முடியவில்லை. குண்டு வெடித்த இடத்தில் சிறிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் எவரும் இல்லாததால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படாமல் தப்பினர்.
தகவல் அறிந்ததும் எஸ்.பி. குணசேகரன் மற்றும் எம்.எல்.ஏ. பாஸ்கர் ஆகியோர் காவல் நிலையத்தில் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதே போல் கடந்த 2004-ம் ஆ்டு முன்விரோதம் காரணமாக ரௌடி ஜெயக்குமார் என்பவர் முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் இருந்த போது வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தேர்தல் நேரம் என்பதால் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 5 =