Home Political BJP AMIT SHAH

BJP AMIT SHAH

657
0

புதுச்சேரியில் பாஜக தேசிய தலைவரை முதலமைச்சர் ரங்கசாமி சந்தித்து பேசினார்.

      பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா இன்று காலை  புதுச்சேரி வந்தார். இந்திரா நகர்  அரசு விடுதியில் காலை உணவு சாப்பிட்ட அவர் சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்று மீண்டும் புதுச்சேரி திரும்பினார். புதுச்சேரியில் தனியார் ஓட்டலில் கல்வியாளர்கள் மற்றும் தொழிலதிபர்களை சந்தித்து பேசினார்.

      இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி, ராதாகிருஷ்ணன் எம்.பி ஆகியோர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்கள். அரை மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

      இதனைத்தொடர்ந்து கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் உரையாற்றி அமித்ஷா, மாலையில் அரவிந்தர் அசிரமத்திற்கு சென்று வழிபட்டு சென்னை புறப்பட்டு சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + two =